தொழில்துறை ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையானது ‘LogiXtics’ எனப்படும் ஒருங்கிணைந்த தளவாட இடைமுகத் தளத்தின் ஹேக்கத்தான் நிகழ்வைத் தொடங்கியுள்ளது.
இது தளவாடத் தொழில்துறைக்குப் பயனளிக்கும் பல வகையான சிந்தனைகளை ஒன்றிணைப்பதற்கானதாகும்.
இந்த ஹேக்கத்தான் நிகழ்ச்சியானது நிதி ஆயோக் மற்றும் அடல் புத்தாக்கத் திட்டம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்துப் பங்குதாரர்களுக்கும் நிகழ்நேரத் தகவல்களை வழங்கும் வகையிலான ஒரு வெளிப்படையான தளத்தினை உருவாக்குவதன் மூலம் இந்தியாவில் தளவாடச் செலவினங்களைக் குறைப்பதற்கும் அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் வேண்டி ஒருங்கிணைந்த தளவாட இடைமுகத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகிலுள்ள மற்ற நாடுகளை விட இந்தியாவில் தளவாடச் செலவினங்கள் சுமார் 14% அதிகமாகும்.
இந்தியாவில் ஒருங்கிணைந்த தளவாட இடைமுகத் தளத்தினை உருவாக்குவதற்காக 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிதி ஆயோக் அமைப்பிடம் தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகம் வலியுறுத்தியது.