இந்தியா-மத்திய ஆசியா பேச்சு வார்த்தை
December 24 , 2021
1341 days
588
- வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கர் புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய -மத்திய ஆசியா பேச்சுவார்த்தைக்கான 3வது சந்திப்பினைத் தலைமையேற்று நடத்தினார்.
- கசகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
- இவர்களது முந்தையச் சந்திப்பானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காணொலி வாயிலாக இந்திய அரசினால் நடத்தப்பட்டது.
- இந்த 5 நாடுகளில் துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.

Post Views:
588