December 10 , 2021
1356 days
678
- தமிழகத்தின் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் காலமானார்.
- 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் முப்படை பாதுகாப்புப் படைத் தளபதியாக இவர் பதவியேற்றார்.
- IAF Mi 17 V5 ஹெலிகாப்டர் இந்த வருத்தத்திற்குரிய விபத்தில் சிக்கியது.
- விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகான் Mi-17V5 என்ற ஹெலிகாப்டரின் ஓட்டுனராக இருந்தார்.
- முப்படைக்கான தலைமை அதிகாரி பதவியானது முதன்முறையாக உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான பதவியாகும்.
- முப்படைக்கான பாதுகாப்புப் படைத் தளபதி, புதிய இராணுவ விவகாரத் துறையின் தலைவராகவும் இருப்பார்.
- முப்படைக்கான பாதுகாப்புப் படைத் தளபதியின் பதவிக்காலம் அதிகபட்சமாக 65 வயது ஆகும்.
- மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் முதன்மை ராணுவ ஆலோசகராகவும் இவர் இருப்பார்.
- இவர் மூன்று படைகளின் தலைவர்களை விட பணி அனுபவம் மிக்கவராக இருப்பார்.
- இவர் புதிதாக உருவாக்கப்பட்ட இணையம் மற்றும் விண்வெளி முகமைகள் மற்றும் சிறப்புப் படைகளுக்கான முச்சேவை முகமையின் தலைவராகவும் பணியாற்றுவார்.

Post Views:
678