TNPSC Thervupettagam

பிம்ஸ்டெக் (BIMSTEC) சுகாதார அமைச்சர்கள் கூட்டம் 2026

November 20 , 2026 10 hrs 0 min 31 0
  • பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பின் (BIMSTEC) முதலாவது சுகாதார அமைச்சர்கள் கூட்டம் இலங்கையின் கொழும்பில் நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில் கூட்டு அமைச்சர்கள் அறிக்கை மற்றும் பொது சுகாதாரத்திற்கான திருத்தப்பட்ட செயல் திட்டம் (2026–2030) ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
  • திருத்தப்பட்ட இத்திட்டம் நோய் கண்காணிப்பு, பெருந்தொற்று தயார்நிலை, நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன், டிஜிட்டல் சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம் மற்றும் 'ஒரே ஆரோக்கியம்' (One Health) அணுகுமுறை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • தொலைமருத்துவம் (Telemedicine), மின்னணு சுகாதாரப் பதிவுகள் மற்றும் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய பிம்ஸ்டெக் டிஜிட்டல் சுகாதாரக் கட்டமைப்பை ஆராய உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன.
  • குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ITRA), பாரம்பரிய மருத்துவத்திற்கான பிம்ஸ்டெக் சிறப்பு மையத்தை இந்தியா நிறுவவுள்ளது.
  • இலங்கைக்கு சுமார் 5.28 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 100 கூடுதல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் 50 ஆரோக்ய ஏடிஎம்களை (Health ATMs) வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்