TNPSC Thervupettagam

இந்தியா-ஸ்வீடன் தொழில்துறை கூட்டாண்மை

November 20 , 2026 10 hrs 0 min 35 0
  • துருக்கியின் அந்தால்யாவில் நடைபெற்ற 31-வது ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டில் (COP31), இந்தியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழுவின் மூன்றாம் கட்டத்தை (LeadIT 3.0) தொடங்கின.
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ஸ்வீடனால் தொடங்கப்பட்ட LeadIT அமைப்பில், பிரேசில் புதிய உறுப்பு நாடாக இணைந்ததைத் தொடர்ந்து, இதன் உறுப்பினர் எண்ணிக்கை 20 நாடுகள் மற்றும் 33 நிறுவனங்களாக உயர்ந்துள்ளது.
  • LeadIT 3.0 ஆனது 2027 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரை செயல்படும்; இது தொழில்துறைத் திட்டங்களை விரிவுபடுத்துதல், நிதி திரட்டுதல் மற்றும் அளவிடக்கூடிய விளைவுகளை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
  • தொழில்நுட்ப மேம்பாடு, மூலதனத் திரட்டல் மற்றும் இடர் குறைப்பு, கொள்கை ஆதரவுடன் கூடிய திறன் மேம்பாடு ஆகியவை இதன் மூன்று முன்னுரிமைகளாகும்.
  • குறைந்த கார்பன் தொழில்துறை மாற்றத்தை மையமாகக் கொண்டு எஃகு, சிமெண்ட் மற்றும் போக்குவரத்து ஆகியவை இதன் முக்கியத் துறைகளாகத் தொடரும்.
  • LeadIT இரண்டாம் கட்டத்தின் கீழ், இந்தியா-ஸ்வீடன் தொழில்துறை மாற்றக் கூட்டாண்மையின் கீழ் எஃகு மற்றும் சிமெண்ட் துறைகளில் 11 முன்-சோதனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்