TNPSC Thervupettagam

சர்வதேச சூரிய சக்தி கூட்டணி - பஹாமாஸ்

November 20 , 2026 10 hrs 0 min 31 0
  • புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் (ISA) 9-வது பொதுச் சபையின் போது, காமன்வெல்த் நாடான பஹாமாஸ் இதன் 116-வது உறுப்பு நாடாக இணைந்தது.
  • 2015 ஆம் ஆண்டில் பாரிஸில் நடைபெற்ற 21-வது ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டின் (COP21) போது இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளால் ISA கூட்டாகத் தொடங்கப்பட்டது.
  • ISA கட்டமைப்பு ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வந்தது.
  • 2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் ISA-வில் இணைவதற்கு அனுமதிக்கும் வகையில் இந்த கட்டமைப்பு ஒப்பந்தம் திருத்தப்பட்டது.
  • ISA என்பது ஹரியானாவின் குருகிராமைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்; இது சூரிய ஆற்றல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்