மத்திய அரசானது பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டத்தை நான்கு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
இத்திட்டத்தின் 5 ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாக 2021 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது
இத்திட்டமானது கோவிட்-19 பெருந்தொற்றிற்குப் பிறகு 2020 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
இத்திட்டத்தின்கீழ், ஒரு நபருக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப் படுகிறன.
நேரடிப் பயன் பரிமாற்றம் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமையுள்ளக் குடும்பங்கள்) ஆகியவற்றின் கீழ் பயன் பெறுபவர்களுக்கும் இது பயனளிக்கிறது.