இந்திய இரயில்வே நிறுவனமானது “பாரத் கௌரவ்” என்ற ஒரு புதிய திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், சுற்றுலாச் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்கள் இரயில்வே நிர்வாகத்திடமிருந்து இரயில்களைக் குத்தகையாகப் பெற்று அவர்கள் விருப்பத் தெரிவிற்கு ஏற்ப எந்த (சுற்றுகளில்) பாதையில் வேண்டுமானாலும் இயக்கலாம்.
இதற்காக இரயில் நிர்வாகம் தோராயமாக 150 ரயில்களுக்கு இணையாக 3033 ICF (ஒருங்கிணைந்த இரயில்பெட்டித் தொழிற்சாலை) பெட்டிகளை ஒதுக்கியுள்ளது.