பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் (PMGKY - Pradhan Mantri Garib Kalyan Yojana) கீழ் ஏறத்தாழ 9 கோடியே 60 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இது முக்கியமாக PM-கிசான் என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
PMGKY ஆனது பொது முடக்கத்தின் போது பாதிக்கப் பட்டிருக்கும் மக்களின் வாழ்வை எளிமைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
PM – கிசான் ஆனது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6000 தொகையானது மூன்று தவணைகளில் செலுத்தப் படுகின்றது.
இந்தத் திட்டமானது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை இலக்காகக் கொண்டு உள்ளது.