பிரதான் மந்திரி மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்காக்கள்
August 6 , 2025 16 days 33 0
பிரதான் மந்திரி மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்த ஆடை (PM மித்ரா) திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் ஏழு ஜவுளிப் பூங்காக்கள் நிறுவப்பட உள்ளன.
இந்தப் பூங்காக்கள் ஒவ்வொன்றும் மூன்று லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஜவுளித் துறையில் ஏற்றுமதி மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களாவன: தமிழ்நாட்டில் விருதுநகர், குஜராத்தில் நவ்சாரி, கர்நாடகாவில் கலபுரகி, மத்தியப் பிரதேசத்தில் தார், உத்தரப் பிரதேசத்தில் லக்னோ, தெலுங்கானாவில் வாரங்கல் மற்றும் மகாராஷ்டிராவில் அமராவதி ஆகியனவாகும்.
இதில் ஐந்து பூங்காக்கள் புதிய, எந்தவித வளர்ச்சியுமில்லாத இது வரையில் எந்தவித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலத்தில் கட்டப்பட உள்ள பசுமைத் திட்டங்களாகும், மேலும் மற்ற இரண்டு பூங்காக்கள் மறுபயன்பாட்டுத் தொழில்துறை நிலத்தில் அதாவது இதற்கு முன்னதாக குறிப்பிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலத்தில் அமைக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு பூங்காவிலும் நவீன ஜவுளி நடைமுறைகளில் தொழிலாளர் திறன்களை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சி மையங்கள், சோதனை ஆய்வகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்.
PM MITRA (மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி மற்றும் ஆயத்த ஆடை) பூங்காக்கள் திட்டம் ஆனது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது.