TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2023

January 29 , 2023 928 days 492 0
  • இது முன்னதாக ஒரு தனித்துவமான சாதனைக்கான தேசியக் குழந்தை விருது என்று அழைக்கப்பட்டது.
  • இது குழந்தைகளுக்கான இந்தியாவின் உயரியக் குடிமை விருதாகும்.
  • இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தினால் ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.
  • இந்த விருதானது இரண்டு பிரிவுகளைக் கொண்டது.
  • புதுமை, கல்விசார் சாதனைகள், சமூகச் சேவை, கலை மற்றும் கலாச்சாரம், வீரம் அல்லது விளையாட்டு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் சிறந்த சாதனைகளுக்காக 18 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்களுக்கு பால் சக்தி புரஸ்கார் வழங்கப்படுகிறது.
  • குழந்தை மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு அல்லது குழந்தைகள் நலனில் சிறந்த பங்களிப்பைச் செய்த தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு பால் கல்யாண் புரஸ்கார் வழங்கப்படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டில், 11 வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த 11 குழந்தைகளுக்கு (ஆறு சிறுவர்கள் மற்றும் ஐந்து சிறுமிகள்) இந்த விருதானது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்