TNPSC Thervupettagam

பீகாரில் புதிய ஈரநிலங்கள்

October 2 , 2025 2 days 35 0
  • பீகாரில் உள்ள கோகுல் ஜலஷே (பக்சர்) மற்றும் உதய்பூர் ஜீல் (மேற்கு சம்பாரன்) ஆகியவை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் ராம்சர் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.
  • இந்தச் சேர்த்தல்களுடன், இந்தியா தற்போது 93 ராம்சர் தளங்களைக் கொண்டு ள்ளதுடன், ஆசியாவில் முதலிடத்திலும், உலகளவில் ஐக்கியப் பேரரசு (176) மற்றும் மெக்ஸிகோ (144) ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலும் உள்ளது.
  • இவை இரண்டும் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தை ஆதரிப்பதோடு வெள்ளக் கட்டுப்பாட்டிற்கும் உதவுகின்றன என்ற நிலையில் இவை மீன்பிடித்தல், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் மூலம் வாழ்வாதாரத்தினை வழங்குகின்ற குதிரைக் குளம்பு வடிவ ஏரிகள் ஆகும்.
  • உதய்ப்பூர் ஜீல் ஏரியில் 280க்கும் மேற்பட்ட தாவர இனங்களையும், எளிதில் பாதிக்கப் படக் கூடிய களியன் உட்பட 35 வலசை போகும் பறவை இனங்களையும் கொண்டு உள்ளது என்ற நிலையில் கோகுல் ஜலஷே வெள்ளத் தடுப்பானாகச் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்