டெல்லியில் தட்டான்களின் கணக்கெடுப்பு
October 2 , 2025
2 days
26
- டெல்லியில் சுமார் 51 வகையான ஓடோனேட் வகைகள் (தட்டான் பூச்சிகள் மற்றும் ஊசித் தட்டான்கள்) காணப்படுவதாக அறியப்படுகிறது.
- கடந்த ஆண்டு 8,630 ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கை இந்த ஆண்டு இதுவரை 13,253 ஆக உயர்ந்துள்ளதுடன், இந்த இனங்களில் 54% அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- யமுனை பல்லுயிர்ப் பூங்காவில், தேனித் தட்டான் (பொட்டாமார்ச்சா கன்ஜெனர்) முதன் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கலிந்தி மற்றும் கமலா நேரு மலை முகடு ஆகியவை நகர அளவிலான எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டப் பங்கினைக் கொண்டுள்ளன.
- கமலா நேரு மலை முகடு பகுதியானது 3,935 தட்டான்கள் மற்றும் 26 இனங்களுடன் நகர அளவிலான எண்ணிக்கையில் முன்னிலை வகித்தன.
- அதைத் தொடர்ந்து கலிந்தி பகுதியில் (3,682 தட்டான்கள் மற்றும் 20 இனங்கள்) மற்றும் ஆரவல்லி (2,249 தட்டான்கள் மற்றும் 16 இனங்கள்) உள்ளன.
- தட்டான் பூச்சிகள் மற்றும் ஊசித் தட்டான்கள் ஆகியவை ஈரநிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் உயிரியல் குறிகாட்டிகள் அல்லது இனங்கள் ஆகும்.
Post Views:
26