இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு புதிய வர்த்தகப் பிரிவாக புதிய இந்திய விண்வெளி நிறுவனம் என்று அழைக்கப்படும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பெங்களூருவில் துவங்கி வைக்கப்பட்டது.
இந்த நிறுவனம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான அங்கீகாரமளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தையும் 10 கோடி ரூபாய் மதிப்பிலான முதல் கட்ட மூலதன வழங்கலையும் கொண்டிருக்கின்றது.
விண்வெளித் துறையின் முதல் வர்த்தக நிறுவனம் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனமாகும்.
இது 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தயாரிப்புகளையும் சேவைகளையும் சந்தைப்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.