தற்பொழுது நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 78 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் 17-வது மக்களவையானது நாடாளுமன்ற வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்களைக் கொண்டு விளங்குகின்றது.
இவர்கள் கீழ் சபையின் மொத்த உறுப்பினர்களில் 14.39 சதவிகிதத்தைக் கொண்டுள்ளனர்.
பெண்கள், இதற்கு முந்தைய மக்களவையில் 65 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் 12.5 சதவிகிதத்தைக் கொண்டிருந்தனர்.
மேலும் பெண் வேட்பாளர்கள் அதிகமாக வெற்றி பெறும் தன்மை அல்லது வெற்றி விகிதத்தை வெளிப்படுத்திக் காண்பித்தனர்.
இவர்கள் அதிகமாக வெற்றி பெறும் விகிதமான 10.89 சதவிகிதத்தை (போட்டியிட்ட 716 வேட்பாளர்களில் 78 வெற்றியாளர்கள்) கொண்டுள்ளனர். ஆனால் ஆண் வேட்பாளர்கள் வெற்றி பெறும் விகிதமாக 6.41 சதவிகிதத்தை மட்டுமேக் கொண்டுள்ளனர்.