TNPSC Thervupettagam

ரைபில்ஸ் மற்றும் கடலோரக் காவற்படை

May 25 , 2019 2187 days 926 0
  • அஸ்ஸாம் ரைபில்ஸ் மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த பொது இயக்குநர்கள் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரில் நடைபெற்ற ஒரு விழாவில் “இணைப்புப் பட்டயம்” ஒன்றில் கையெழுத்திட்டனர்.
  • இது இரு படைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் பயிற்சி மற்றும் விளையாட்டுகளுக்காக, ஒரு படை மற்ற படையின் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதியளிக்கிறது.
  • அஸ்ஸாம் ரைபில்ஸின் 3-வது படைப்பிரிவு (நாகா குன்றுகள்) மற்றும் இந்தியக் கடலோரக் காவற்படைக் கப்பலான “சவுரியா” ஆகியவற்றிற்கிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  • இந்த “இணைப்புப் பட்டயமானது” சமூக தளங்கள் மற்றும் தொழில்சார் நிலையில் “வட கிழக்கில் உள்ள சென்டினல் இன மக்களை “ ”கடலின் சென்டினல் இன மக்களுடன்” கலந்துரையாட வழிவகை செய்கின்றது.
அஸ்ஸாம் ரைபில்ஸின் 3-வது (நாகா குன்றுகள்) படைப் பிரிவு
  • இது அஸ்ஸாம் ரைபில்ஸின் மிகப் பழமையான படைப் பிரிவாகும். இது 1835 ஆம் ஆண்டில் “தி கச்சார் லெவி” (The Cachar Levy) என்ற படையாக உருவாக்கப்பட்டது.
  • இது பகுதிசார் இராணுவ அமைப்பாகும்.
  • இது முதன்முதலில் அஸ்ஸாமின் நல்கோங் மாவட்டத்தில் பொறுப்பு அதிகாரியாக இருந்த ஆங்கில குடிமைப்பணிகள் அதிகாரியான, ஜார்ஜ் என்பவரின் தலைமையின் கீழ் 750 படை வீரர்களுடன் தொடங்கப்பட்டது.
  • இது அஸ்ஸாமின் கிழக்கு மாகாணத்தினை பிரம்மபுத்திரா நதியிலிருந்து கச்சார் குன்றுகள் வரை பாதுகாக்கும் பொறுப்பைப் பெற்றுள்ளது.
  • தற்பொழுது இந்தப் படைப் பிரிவு நாகாலாந்தின் கோஹிமாவில் செயல்படுகின்றது.
  • கோஹிமாவில் இப்படை இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களுடன் வீரத்துடன் போரிட்டு, அவர்கள் இந்தியாவிற்குள் முன்னேறுவதை தடுத்து நிறுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்