2014 ஆம் ஆண்டின் 16 ஆவது மக்களவையில் நிகழ்ந்ததைப் போன்றே, 2019-24 வரையிலான கால கட்டத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவையானது எதிர்க் கட்சித் தலைவர் (LOP - leader of opposition) இல்லாமல் செயல்படவிருக்கின்றது.
1977 ஆம் ஆண்டின் எதிர்க் கட்சித் தலைவரின் ஊதியம் மற்றும் படிநிலைகள் என்ற பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் “எதிர்க் கட்சித் தலைவர்” என்ற பதவியானது சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் (Statutory recognition) பெற்றுள்ளது.
இச்சட்டமானது எதிர்க்கட்சியாக செயல்படும் கட்சியானது அவையின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 10 சதவிகித (மக்களவையில் 55 இடங்கள்) உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றது.
இல்லையென்றால் அந்த அவை எதிர்க்கட்சித் தலைவரை அங்கீகரிக்காது.
எதிர்க் கட்சித் தலைவர் பதவியானது மிகப்பெரிய ஒற்றை எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவருக்கு மட்டுமே வழங்கப்படும்.
தேர்தலுக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட கூட்டணியாக இருந்தாலும் கூட, கூட்டணியைச் சேர்ந்த தலைவருக்கு LOP என்ற அங்கீகாரம் வழங்கப்படாது.
மக்களவையின் முதல் அதிகாரப்பூர்வ எதிர்க் கட்சித் தலைவர் ராம் சுபங் சிங் ஆவார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் 1969 ஆம் ஆண்டில் எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.