தமிழ்நாடு அரசானது, 25 கோடி ரூபாய் செலவில் ஏழு புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களை அமைக்க உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் மற்றும் கண்டமங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புரம், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி ஆகிய இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் ஆனது, வேளாண்மைத் துறை, தோட்டக்கலை, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகம், விதைச் சான்றிதழ் மற்றும் வேளாண் பொறியியல் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு உள்ளன.