TNPSC Thervupettagam

புதிய தலைமைத் தகவல் ஆணையர்

November 10 , 2020 1700 days 912 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் யஷ்வர்தன் K சின்ஹா என்பவரை இந்தியாவின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக (Chief Information Commissioner - CIC) நியமித்துள்ளார்.
  • இவர் பிரதமர் தலைமையிலான மூன்று உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவினால் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • இந்தக் குழுவில் பிரதமர் மோடியைத் தவிர மக்களவையின் எதிர்க் கட்சித் தலைவரான அதிர் ரஞ்சன் சௌத்ரி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் அன்று தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த பீமல் ஜுல்கா என்பவருக்குப் பிறகு 2 மாதங்களாக இந்தப் பதவி காலியாக இருந்தது.
  • பின்னர், உதய் மகுர்கர் (பத்திரிக்கையாளர்) ஹீரா லால் சாமாரியா (முன்னாள் தொழிலாளர் நலத் துறை செயலாளர்) மற்றும் சரோஜ் புன்கானி (முன்னாள் துணை சிஏஜி) ஆகியோர் தகவல் ஆணையர்களாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப் பட்டுள்ளனர்.
  • CIC ஆணையத்தின் பணிகள் மற்றும் பொறுப்புகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 என்ற சட்டத்தினால் வரையறுக்கப் பட்டுள்ளன.
  • இவர் தகவல் அறியும் உரிமை (திருத்தம்) சட்டம், 2019 என்ற திருத்தப்பட்ட சட்டத்தின் படி மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார்.
  • இதற்கு முன்பு அந்த பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருந்தது.
  • CIC ஆனது 2005 ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் 2005 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்