2022 ஆம் ஆண்டின் அகில இந்தியப் புலிகள் மதிப்பீட்டின் அடிப்படையில் "Roadmap for Active Management of Tigers in India என்ற அறிக்கையை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) வெளியிட்டது.
இந்தியாவின் புலிகள் காப்பகங்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு (58 இல் 38) காப்பகங்களில் இரைத் தளம் குறைந்து வருகிறது, மோசமான வாழ்விடத் தரம் அல்லது இரண்டும் காணப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
20 புலிகள் காப்பகங்கள் மட்டுமே போதுமான இரை மற்றும் நல்ல வாழ்விடத்தைக் கொண்டுள்ள அதே சமயம் 36 காப்பகங்கள் கடும் இரை பற்றாக்குறையை எதிர் கொள்கின்றன மற்றும் 17 காப்பகங்கள் மோசமான வாழ்விடம் மற்றும் போதிய இரையின்மை ஆகிய இரண்டையும் கொண்டுள்ளன.
ஒன்பது புலிகள் காப்பகங்களில் புலிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக அல்லது மிகக் குறைவான அளவிலேயே உள்ளன, மேலும் 25 காப்பகங்களில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்தியாவில் மதிப்பிடப்பட்ட 3,682 புலிகள் உள்ளன, இவற்றில் 2,338 புலிகள் காப்பகங்களுக்கு உள்ளேயும் 1,344 புலிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியேயும் உள்ளன; உலகின் காட்டுப் புலிகளில் சுமார் 75% இந்தியாவில் காணப் படுகின்றன.
புலிகள் பாதுகாப்பை மேம்படுத்த வாழ்விட மறுசீரமைப்பு, இரை மீட்பு, வேட்டையாடுதல் தடுப்பு நடவடிக்கைகள், ஆக்கிரமிப்பு இனங்களை அகற்றுதல் மற்றும் வனவிலங்கு வழித்தடங்களை பாதுகாத்தல் ஆகியவற்றை இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.