TNPSC Thervupettagam

101வது ராம்சார் தளம் - க்லாவ் ஏரி

August 6 , 2026 3 days 110 0
  • அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள க்லாவ் ஏரி இந்தியாவின் 101வது ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இது அம்மாநிலத்தின் முதல் ராம்சார் தளமாகும்.
  • இதன் மூலம், 2014 ஆம் ஆண்டில் 26 ஆக இருந்த இந்தியாவின் மொத்த ராம்சார் தளங்களின் எண்ணிக்கை தற்போது 101 ஆக உயர்ந்துள்ளது.
  • க்லாவ் ஏரி என்பது கிழக்கு இமயமலையில் உள்ள கம்லாங் புலிகள் காப்பகம் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தின் உள்ளே அமைந்துள்ள ஒரு தூய்மையான நன்னீர் ஏரியாகும்.
  • இந்த ஈரநிலம் ஒரு பல்லுயிர் பெருக்க மையமாகவும், அதன் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 150 க்கும் மேற்பட்ட மர வகைகளுக்கும் 49 ஆர்க்கிட் வகைகளுக்கும் ஆதரவளிக்கிறது.
  • ராம்சார் தளம் என்ற அங்கீகாரம் ஈரநிலப் பாதுகாப்பு, பல்லுயிர் பாதுகாப்பு, நீர் மற்றும் பருவநிலை பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரங்களை மேம்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்