TNPSC Thervupettagam

புலிகள் காப்பக அறிக்கை 2026

August 6 , 2026 3 days 73 0
  • 2022 ஆம் ஆண்டின் அகில இந்தியப் புலிகள் மதிப்பீட்டின் அடிப்படையில் "Roadmap for Active Management of Tigers in India என்ற அறிக்கையை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) வெளியிட்டது.
  • இந்தியாவின் புலிகள் காப்பகங்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு (58 இல் 38) காப்பகங்களில் இரைத் தளம் குறைந்து வருகிறது, மோசமான வாழ்விடத் தரம் அல்லது இரண்டும் காணப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • 20 புலிகள் காப்பகங்கள் மட்டுமே போதுமான இரை மற்றும் நல்ல வாழ்விடத்தைக் கொண்டுள்ள அதே சமயம் 36 காப்பகங்கள் கடும் இரை பற்றாக்குறையை எதிர் கொள்கின்றன மற்றும் 17 காப்பகங்கள் மோசமான வாழ்விடம் மற்றும் போதிய இரையின்மை ஆகிய இரண்டையும் கொண்டுள்ளன.
  • ஒன்பது புலிகள் காப்பகங்களில் புலிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக அல்லது மிகக் குறைவான அளவிலேயே உள்ளன, மேலும் 25 காப்பகங்களில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
  • இந்தியாவில் மதிப்பிடப்பட்ட 3,682 புலிகள் உள்ளன, இவற்றில் 2,338 புலிகள் காப்பகங்களுக்கு உள்ளேயும் 1,344 புலிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியேயும் உள்ளன; உலகின் காட்டுப் புலிகளில் சுமார் 75% இந்தியாவில் காணப் படுகின்றன.
  • புலிகள் பாதுகாப்பை மேம்படுத்த வாழ்விட மறுசீரமைப்பு, இரை மீட்பு, வேட்டையாடுதல் தடுப்பு நடவடிக்கைகள், ஆக்கிரமிப்பு இனங்களை அகற்றுதல் மற்றும் வனவிலங்கு வழித்தடங்களை பாதுகாத்தல் ஆகியவற்றை இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்