புலிகள் வளங்காப்பு குறித்த 4வது ஆசிய அமைச்சர்கள் மாநாடு
January 26 , 2022 1434 days 593 0
மலேசிய அரசு மற்றும் உலகப் புலிகள் மன்றம் ஆகியவற்றினால் சமீபத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
இது உலகப் புலிகள் மீட்புத் திட்டத்தினை நோக்கிய முன்னேற்றம் மற்றும் புலிகள் வளங் காப்பிற்கான உறுதிப்பாடுகள் ஆகியவற்றை மறுமதிப்பீடு செய்வதற்கான ஒரு முக்கிய நிகழ்வு ஆகும்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரஷ்யாவின் விளாடிவோஸ்க் நகரில் நடைபெற உள்ள உலகப் புலிகள் உச்சி மாநாட்டிற்காக புதுடெல்லி பிரகடனத்தை இறுதி செய்வதற்கு, புலிகள் வாழும் பகுதிகளைக் கொண்ட நாடுகளுக்கு இந்தியா உதவி வழங்கும்.
“உச்சி மாநாட்டிற்கு முந்தைய நிலை மாநாடானது” 2010 ஆம் ஆண்டில் புதுடெல்லியில் நடைபெற்றது.
இதில், உலகப் புலிகள் உச்சி மாநாட்டிற்காக புலிகள் வளங்காப்பு குறித்த ஒரு வரைவு பிரகடனம் இறுதி செய்யப்பட்டது.