பூமியின் மறைந்துள்ள அடுக்கு
March 12 , 2021
1524 days
665
- சமீபத்தில் விஞ்ஞானிகள் பூமியின் கருப் பகுதிக்குள் மறைந்த ஓர் அமைப்பின் அடையாளத்தைக் கண்டறிந்துள்ளது.
- ஒரு நீண்ட கால கூற்றின் படி தற்பொழுது 4 அடுக்குகள் பூமிக்குள் உள்ளன. அவையாவன
- மேல் ஓடு
- கலசம்
- வெளிக் கரு
- உட்கரு
- ஆனால் இந்த அடையாளமானது பூமியின் மையப் பகுதியில் என்ன உள்ளது என்று நீண்ட காலமாக நம்பப்பட்டு வரும் உண்மையை மாற்றும் திறன் கொண்டது.
- சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அடுக்கானது 5வது அடுக்கு என்று குறிப்பிடப் படுகின்றது.
- மேலும் ஆராய்ச்சியாளர்கள் உட்கருவிற்குள் இருக்கும் இரும்பின் அமைப்பில் ஏற்பட்டுள்ள சில மாறுபாடுகளையும் கண்டறிந்துள்ளனர்.
- இந்த மாறுபாடுகள் ஒரு புதிய “எல்லைக் கோடானது” பூமியின் மையத்திலிருந்து 650 கிலோ மீட்டர் வரை செல்வதாகக் கூறுகின்றது.
Post Views:
665