TNPSC Thervupettagam

பூம்புகார் தொல்லியல் ஆய்வு

September 24 , 2026 9 days 140 0
  • தமிழ்நாட்டின் மயிலாடுதுறை பூம்புகார் கடற்கரையில் நீருக்கடியில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வின் போது ஒரு டார்பிடோ/உருளை வடிவ ஜாடித் துண்டு, நான்கு பழங்கால உறை கிணறுகள் மற்றும் 250 க்கும் மேற்பட்ட பீங்கான் துண்டுகள் கண்டுபிடிக்கப் பட்டன.
  • மேற்கு ஆசியாவிலிருந்து வந்ததாகக் கருதப்படும் இந்த டார்பிடோ/உருளை வடிவ ஜாடியானது, கடற்கரையிலிருந்து 2 கி.மீ தொலைவில் சுமார் 10 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • டார்பிடோ/உருளை வடிவ ஜாடிகள் என்பவை மது மற்றும் எண்ணெய் போன்ற திரவங்களை கப்பல் மூலம் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட குழாய் வடிவிலான கலங்களாகும்.
  • நான்கு உறை கிணறுகளும் 60-65 செ.மீ விட்டம் கொண்டவை, மேலும் இது ஒரு பழங்காலத் தொல் கால்வாய் இருப்பதைக் குறிக்கலாம்.
  • காவிரி பூம்பட்டினம் என்றும் அழைக்கப்படும் பழங்காலத் துறைமுக நகரமான பூம்புகார், அதன் தொல்பொருள் எச்சங்கள் மற்றும் கடலோர அரிப்பால் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்காக ஆய்வு செய்யப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்