2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்தியா பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதற்கான இலக்கினை எட்டியது.
எத்தனால் விநியோக ஆண்டு 2025-26 (2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்) ஆம் ஆண்டின் இறுதியில் 20% என்ற ஒட்டு மொத்த எத்தனால் கலப்பிற்கான இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட உயிரி எரிபொருள்கள் மீதான தேசிய கொள்கை, 20% எத்தனால் கலப்பு இலக்கு ஆண்டினை 2030 ஆம் ஆண்டிற்குப் பதிலாக 2025-26 ஆம் ஆண்டாக மாற்றியது.
பொதுத்துறை நிறுவன எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 45.5 கோடி லிட்டர் எத்தனால் பெற்றன.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் எத்தனால் கலப்பு விகிதம் 19.97% ஆக இருந்தது.