TNPSC Thervupettagam

பெண்களுக்கான நலத்திட்டங்கள்

May 16 , 2025 5 days 101 0
  • சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை ஆனது பெண்களின் உரிமைகளுக்கு வழி வகுத்தது.
  • ‘மகளிர் விடியல் பயணம் திட்டம்’ ஆனது, முதலமைச்சர் பிறப்பித்த முதல் ஐந்து உத்தரவுகளில் ஒன்றாகும்.
  • இந்தத் திட்டத்தின் காரணமாக, பெண்கள் ஒவ்வொருவரும் மாதத்திற்கு 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பினை பெற்றனர்.
  • இதுவரை, 1.15 கோடி பெண்கள் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 1,000 ரூபாயினை நேரடியாக தங்கள் வங்கிக் கணக்குகளில் இதில் பெற்று வருகின்றனர்.
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுமிகளுக்கு உதவுவதற்காக என்று, ‘புதுமைப் பெண் திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 1000 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது.
  • இந்தத் திட்டத்தின் காரணமாக, பள்ளியிலிருந்து கல்லூரிகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது.
  • தற்போது வரையில், பணி புரியும் பெண்களுக்கான 1,303 படுக்கைகள் கொண்ட 13 'தோழி விடுதிகள்’ செயல்பாட்டில் உள்ளன.
  • மாநில அரசு மேற்கொண்ட பிற முன்னெடுப்புகள்:
    • சுய உதவிக்கு ழுக்களில் பெண்களுக்கான கடன் வரம்பு அதிகரிப்பு,
    • அரசு வேலைகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு,
    • மகப்பேறு விடுப்பு கால அளவு அதிகரிப்பு,
    • தமிழ்நாடு புத்தொழில் நிறுவன முதன்மை நிதி வழங்கும் திட்டம் மற்றும்
    • உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்