கோயம்புத்தூரில் உள்ள மகிளா நீதிமன்றமானது, 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது நபர்களையும் குற்றவாளிகளாக தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
9 பேருக்கும் "சாகும் வரை ஆயுள் தண்டனை" விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட எட்டு பேருக்கும் 85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றமானது அவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலக் கட்டத்தில் வெவ்வேறு கால சிறைத் தண்டனைகளையும் வழங்கியது.
ஒவ்வொருவர் மீதும், 376D (கூட்டுப் பலாத்காரம்) மற்றும் 376(2)(n) (ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தல்) ஆகிய பிரிவுகள் உட்பட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கடுமையான விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மத்தியப் புலனாய்வுப் பிரிவானது, அந்த ஒன்பது குற்றவாளிகளுக்கும் எதிராக IPC சட்டத்தின் 120 (B), 342, 354, 354 (B), 366, 376 (D), மற்றும் 376 (2) (N) பிரிவுகளையும் செயல் படுத்தியது.
இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்பதோடு, இது ஆயுள் தண்டனையாகவும் நீட்டிக்கப் படலாம்.
இந்த வழக்கு முதலில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் குற்றப் பிரிவு - குற்றப் புலனாய்வுத் துறைக்கும் (CB-CID) பின்னர் மத்தியப் புலனாய்வுத் துறைக்கும் மாற்றப் பட்டது.
ஆயுள் தண்டனை என்பது ஒரு குற்றவாளி அவரது வாழ்காலம் முழுவதும் சிறை வாசம் பெறுவதைக் குறிக்கிறது என்று இந்தத் தண்டனை குறித்து நிலவிய தவறான கருத்தை நீக்கி உச்ச நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்துள்ளது.
தண்டனைக் குறைப்பின் கீழ், ஒரு தகுதி வாய்ந்த அரசாங்கம் ஆனது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் தண்டனைக் காலத்தை 14 ஆண்டுகளுக்கும் கீழ் குறைக்க முடியாது.
மகளிர் (மகிளா) நீதிமன்றம் என்று அழைக்கப்படும் இந்தச் சிறப்பு நீதிமன்றம் ஆனது 2002 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக பிற சமூக நலச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மிக விரைவாக விசாரித்து தீர்ப்பளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு பெண் நீதிபதி தலைமையில் இயங்கும் இந்த நீதிமன்றம், பெண் வழக்கறிஞர்கள், எழுத்தர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை உள்ளடக்கியது.