சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை ஆனது பெண்களின் உரிமைகளுக்கு வழி வகுத்தது.
‘மகளிர் விடியல் பயணம் திட்டம்’ ஆனது, முதலமைச்சர் பிறப்பித்த முதல் ஐந்து உத்தரவுகளில் ஒன்றாகும்.
இந்தத் திட்டத்தின் காரணமாக, பெண்கள் ஒவ்வொருவரும் மாதத்திற்கு 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பினை பெற்றனர்.
இதுவரை, 1.15 கோடி பெண்கள் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 1,000 ரூபாயினை நேரடியாக தங்கள் வங்கிக் கணக்குகளில் இதில் பெற்று வருகின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுமிகளுக்கு உதவுவதற்காக என்று, ‘புதுமைப் பெண் திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 1000 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் காரணமாக, பள்ளியிலிருந்து கல்லூரிகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது.
தற்போது வரையில், பணி புரியும் பெண்களுக்கான 1,303 படுக்கைகள் கொண்ட 13 'தோழி விடுதிகள்’ செயல்பாட்டில் உள்ளன.
மாநில அரசு மேற்கொண்ட பிற முன்னெடுப்புகள்:
சுய உதவிக்கு ழுக்களில் பெண்களுக்கான கடன் வரம்பு அதிகரிப்பு,
அரசு வேலைகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு,
மகப்பேறு விடுப்பு கால அளவு அதிகரிப்பு,
தமிழ்நாடு புத்தொழில் நிறுவன முதன்மை நிதி வழங்கும் திட்டம் மற்றும்