நாசாவின் OSIRIS-REx (Origins, Spectral Interpretation, Resource Identification, Security-Regolith Explorer) விண்கலம் ஆனது 2023 ஆம் ஆண்டில் பென்னு குறுங்கோளில் இருந்து சேகரித்த மாதிரிகளைப் புவிக்கு திருப்பி அனுப்பியது.
அதில் ஆற்றலாகப் பயன்படுத்தப்படும் ஆறு கார்பன் மூலக்கூறு கொண்ட சர்க்கரையான குளுக்கோஸை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.
ரைபோ நியூக்ளிக் அமிலத்திற்கு (ஆர்.என்.ஏ) அவசியமான ஐந்து கார்பன் மூலக்கூறு கொண்ட சர்க்கரையான ரைபோஸும் இதில் கண்டுபிடிக்கப்பட்டது.
அடையாளம் காணப்பட்ட பிற கரிம சேர்மங்களில் அமினோ அமிலங்கள், நியூக்ளியோபேஸ்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் அடங்கும்.
டி.என்.ஏவில் உள்ள சர்க்கரையான டி ஆக்ஸிரைபோஸ் (டி ஆக்ஸிரைபோ நியூக்ளிக் அமிலம்) இதில் கண்டறியப்படவில்லை.