TNPSC Thervupettagam

பெருங்கடல் மற்றும் தாழ்வெப்ப மண்டலம் பற்றிய IPCC அறிக்கை

September 29 , 2019 2136 days 739 0
  • காலநிலை மாற்றம் மீதான அரசாங்கங்களுக்கு இடையேயான குழுவானது (Intergovernmental Panel on Climate Change - IPCC) மாறி வரும் காலநிலைச் சூழலில் பெருங்கடல் மற்றும் தாழ்வெப்ப மண்டலம் பற்றிய ஒரு சிறப்பு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
முக்கியமான கண்டுபிடிப்புகள்
  • 1902 மற்றும் 2015க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் உலகளாவிய சராசரி கடல் மட்ட உயர்வானது 16 செ.மீ அதிகரித்துள்ளது. கடந்த ஒரு தசாப்தத்தில் கடல் மட்ட உயர்வு விகிதம் இரட்டிப்பாகியுள்ளது.
  • வெப்பநிலை அதிகரிப்பு, பனிப் பாறைகள் உருகுதல் மற்றும் துருவ பனி உருகுதல் ஆகியவற்றினால் கடல் நீரின் வெப்ப விரிவாக்கம் காரணமாக கடல் மட்டங்கள் உயர்ந்து கொண்டிருந்தன.
  • எடுத்துக்காட்டுகள்:
  • கிரீன்லாந்து பனிப் படலம் - 2006 மற்றும் 2015ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 278 பில்லியன் டன் வீதத்தில் பனிப் பாறைகளை இழந்துள்ளது.
  • அண்டார்டிக் பனிப் படலம் - 2006 முதல் 2015ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 155 பில்லியன் டன் அளவிலான பனிப் பாறைகளை இழந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்