ஐஎன்எஸ் நீலகிரி - எதிரிகளின் கண்ணில் புலப்படாத பீரங்கிப் போர்க் கப்பல்
September 29 , 2019 2136 days 789 0
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் எதிரிகளின் கண்ணில் புலப்படாத பீரங்கிப் போர்க் கப்பலான ஐஎன்எஸ் ‘நீலகிரி’ என்பதனை மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் அறிமுகப் படுத்தியுள்ளார்.
திட்டம் 17ஏ என்ற திட்டத்தின் கீழ் கடற்படையின் ஏழு புதிய “எதிரிகளின் கண்ணில் புலப்படாத பீரங்கிப் போர்க் கப்பல்களின்” வரிசையில் முதலாவது கப்பல் இதுவாகும்.
திட்டம் 17ஏ பீரங்கிப் போர்க் கப்பல்கள் என்பது சிவாலிக் வகுப்பைச் சேர்ந்த எதிரிகளின் கண்ணில் புலப்படாத பீரங்கிப் போர்க் கப்பல்களின் வரிசையில் அமைந்த வடிவமைப்பாகும்.
இவை எதிரிகளின் கண்ணில் புலப்படாமல் இருப்பதற்கான மிகவும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உணர்விகளைக் கொண்டுள்ளன.