பெருங்கடல் மற்றும் தாழ்வெப்ப மண்டலம் பற்றிய IPCC அறிக்கை
September 29 , 2019 2136 days 738 0
காலநிலை மாற்றம் மீதான அரசாங்கங்களுக்கு இடையேயான குழுவானது (Intergovernmental Panel on Climate Change - IPCC) மாறி வரும் காலநிலைச் சூழலில் பெருங்கடல் மற்றும் தாழ்வெப்ப மண்டலம் பற்றிய ஒரு சிறப்பு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
முக்கியமான கண்டுபிடிப்புகள்
1902 மற்றும் 2015க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் உலகளாவிய சராசரி கடல் மட்ட உயர்வானது 16 செ.மீ அதிகரித்துள்ளது. கடந்த ஒரு தசாப்தத்தில் கடல் மட்ட உயர்வு விகிதம் இரட்டிப்பாகியுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பு, பனிப் பாறைகள் உருகுதல் மற்றும் துருவ பனி உருகுதல் ஆகியவற்றினால் கடல் நீரின் வெப்ப விரிவாக்கம் காரணமாக கடல் மட்டங்கள் உயர்ந்து கொண்டிருந்தன.
எடுத்துக்காட்டுகள்:
கிரீன்லாந்து பனிப் படலம் - 2006 மற்றும் 2015ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 278 பில்லியன் டன் வீதத்தில் பனிப் பாறைகளை இழந்துள்ளது.
அண்டார்டிக் பனிப் படலம் - 2006 முதல் 2015ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 155 பில்லியன் டன் அளவிலான பனிப் பாறைகளை இழந்துள்ளது.