TNPSC Thervupettagam

பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் குறைவு

December 2 , 2022 894 days 546 0
  • 2018-20 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் (MMR) 97 ஆக இருந்தது.
  • 2014-16 ஆம் ஆண்டில், 130 ஆக இருந்த பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதமானது, அதன்பின் நிலையான வகையிலான ஒரு சரிவைக் கண்டது.
  • ஒரு பிராந்தியத்தில் பதிவாகும் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் என்பது அந்தப் பகுதியில் உள்ள பெண்களின் பேறு காலம் சார்ந்த ஆரோக்கியத்தின் ஒரு மதிப்பீடு ஆகும்.
  • இது ஒரு லட்சம் குழந்தை பிறப்புகளின் போது ஏற்படும் கர்ப்பிணிகளின் இறப்பாகும்.
  • இந்திய மாநிலங்களில், அசாம் அதிகபட்சமாக 195 பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதத்துடனும், அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (173) மற்றும் உத்தரப் பிரதேசம் (167) ஆகிய மாநிலங்களும் இடம் பெற்றுள்ளன.
  • கேரளாவில் பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் (19) மிகக் குறைவாக உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 33 ஆகவும், தெலுங்கானா மாநிலத்தில் 43 ஆகவும் அது பதிவாகியுள்ளது.
  • இதில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது (54).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்