இந்தியக் கடற்படையின் மூன்றாவது ஆய்வுக் கப்பலான ‘இக்சாக்’ சென்னையில் படையில் இணைக்கப்பட்டது.
இது நான்கு ஆய்வுக் கப்பல்கள் (பெரியது) (SVL) திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மூன்றாவது கப்பலாகும்.
இக்கப்பலுக்கு ‘வழிகாட்டி’ என்று பொருள்படும் வகையில் ‘இக்சாக்’ என்று பெயரிடப் பட்டுள்ளது.
கடலில் கடற்படையினர் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கு ஆய்வுக் கப்பல்களின் முக்கியப் பங்களிப்பைக் குறிக்கும் வகையில் இந்தக் கப்பலுக்கு இந்தப் பெயரிடப் பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதல் கப்பலான ‘சந்தாயக்’ 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 05 ஆம் தேதியன்று கொல்கத்தாவில் உள்ள GRSE என்ற கப்பல் கட்டும் தளத்தில் படையில் இணைக்கப் பட்டது.