அசாம் அரசு, பொது சிவில் சட்ட (UCC) மசோதாவை அம்மாநிலச் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட சட்டம், திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது, பலதார மணம், வாரிசுரிமை மற்றும் சேர்ந்து வாழும் உறவுகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத நடைமுறைகள் இந்த மசோதாவின் வரம்பிற்குள் வராது.
மாநிலத்தின் மலை மற்றும் சமவெளிப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினச் சமூகத்தினருக்கும் இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தின் விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப் படும்.
இந்த நடவடிக்கையின் மூலம், உத்தரகாண்ட் மற்றும் குஜராத்திற்குப் பிறகு, பொது சிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலமாக அசாம் உருவெடுக்க உள்ளது.
உத்தரகாண்ட் 2024-ல் பொது சிவில் சட்டச் சட்டத்தை இயற்றிய முதல் இந்திய மாநிலமாக ஆனது.
1867-ஆம் ஆண்டின் போர்த்துகீசிய சிவில் சட்டத்தின்படி நிர்வகிக்கப் படும் பொது சிவில் சட்டத்தை (UCC) செயல்படுத்தும் ஒரே இந்திய மாநிலம் கோவா ஆகும்.
இந்திய அரசியலமைப்பின் 44-வது சரத்து, பொது சிவில் சட்டத்தை (UCC) அரசின் கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்றாக வகைப்படுத்துகிறது.