TNPSC Thervupettagam

கர்நாடக 2022 ஹிஜாப் தடை உத்தரவு

May 16 , 2026 16 days 39 0
  • கர்நாடக அரசு, பள்ளி சீருடைகள் தொடர்பான தனது 2022 பிப்ரவரி மாத உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது.
  • அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் முன்-பல்கலைக்கழகக் கல்லூரிகளில், மாணவர்கள் பரிந்துரைக்கப்பட்ட சீருடைகளுடன், வரையறுக்கப் பட்ட அளவிலான பாரம்பரிய மற்றும் மதம் சார்ந்த சின்னங்களை அணிய அனுமதிக்கும் புதிய வழி காட்டுதல்களை அது வெளியிட்டுள்ளது.
  • கல்வி நிறுவனங்கள், அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு, சமத்துவம், கண்ணியம், சகோதரத்துவம், ஒழுக்கம், மதச்சார்பின்மை, பரஸ்பர மரியாதை மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இடங்கள் என்று அது கூறியுள்ளது.
  • கல்வி நிறுவன சீருடையுடன் மாணவர்கள் ஹிஜாப் அல்லது தலை முக்காடு, தலைப்பாகை, சிவதாரம், பூணூல் மற்றும் ருத்ராட்சம் ஆகியவற்றை அணிய இது அனுமதிக்கிறது.
  • ஆனால், அவை ஒழுக்கம், பாதுகாப்பு அல்லது மாணவர் அடையாளத்திற்கு இடையூறு விளைவிக்காத வரையில் மட்டுமே ஆகும்.
  • அதே சமயம், எந்தவொரு மாணவரையும் அத்தகைய சின்னங்களை அணியவோ அல்லது அகற்றவோ கட்டாயப்படுத்த முடியாது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்