TNPSC Thervupettagam

பொது சிவில் சட்ட மசோதா வரைவு – அசாம்

May 16 , 2026 16 days 52 0
  • அசாம் அரசு, பொது சிவில் சட்ட (UCC) மசோதாவை அம்மாநிலச் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.
  • இந்த முன்மொழியப்பட்ட சட்டம், திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது, பலதார மணம், வாரிசுரிமை மற்றும் சேர்ந்து வாழும் உறவுகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத நடைமுறைகள் இந்த மசோதாவின் வரம்பிற்குள் வராது.
  • மாநிலத்தின் மலை மற்றும் சமவெளிப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினச் சமூகத்தினருக்கும் இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தின் விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப் படும்.
  • இந்த நடவடிக்கையின் மூலம், உத்தரகாண்ட் மற்றும் குஜராத்திற்குப் பிறகு, பொது சிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலமாக அசாம் உருவெடுக்க உள்ளது.
  • உத்தரகாண்ட் 2024-ல் பொது சிவில் சட்டச் சட்டத்தை இயற்றிய முதல் இந்திய மாநிலமாக ஆனது.
  • 1867-ஆம் ஆண்டின் போர்த்துகீசிய சிவில் சட்டத்தின்படி நிர்வகிக்கப் படும் பொது சிவில் சட்டத்தை (UCC) செயல்படுத்தும் ஒரே இந்திய மாநிலம் கோவா ஆகும்.
  • இந்திய அரசியலமைப்பின் 44-வது சரத்து, பொது சிவில் சட்டத்தை (UCC) அரசின் கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்றாக வகைப்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்