TNPSC Thervupettagam

பொது நிறுவன வளாகங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுதல்

November 10 , 2025 2 days 14 0
  • பள்ளிகள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பிற பொது நிறுவன வளாகங்களில் இருந்து தெருநாய்களை அகற்ற உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது.
  • நாய்கள், நியமிக்கப்பட்ட காப்பிடங்களுக்கு மாற்றப்படுவதற்கு முன்னதாக, 2023 ஆம் ஆண்டு விலங்குப் பிறப்புக் கட்டுப்பாடு (ABC) விதிகளின் கீழ் கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நிறுவனமும் பராமரிப்பு மற்றும் கண்காணிப்புக்காக என்று ஒரு முதன்மை அதிகாரியை நியமிக்க வேண்டும் மற்றும் வேலி அல்லது பாதுகாப்பான வளாகங்களை உறுதி செய்ய வேண்டும்.
  • உள்ளாட்சி அமைப்புகள், அவற்றின் அகற்றல் நடவடிக்கைகளை முடித்து அதற்கான இணக்க அறிக்கைகளை 8 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  • நாய்க்கடி சம்பவங்களைத் தடுப்பதும், விலங்கு நலத் தரங்களைப் பேணுவதோடு குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதுமே இந்த வழிகாட்டுதல்களின் ஒரு நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்