பொது – தனியார் பங்களிப்பின் கீழ் மருத்துவக் கல்லூரிகளை அமைத்தல்
January 7 , 2020 2050 days 702 0
அரசின் கொள்கை வகுக்கும் நிறுவனமான நிதி ஆயோக் ஆனது “பொது தனியார் பங்களிப்பின் கீழ் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான மாதிரிச் சலுகை ஒப்பந்தம்” (Public Private Partnership - PPP) என்ற ஒரு வரைவு வழிகாட்டுதல் ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
பல்வேறு அறிக்கைகளின் படி, புதிய அல்லது ஏற்கனவே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளை தற்பொழுது செயல்பாட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையுடன் இணைப்பதற்காக PPP மாதிரியை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
இந்த ஆலோசனையானது மருத்துவக் கல்வியில் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் நிதி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இருக்கின்றது.
இந்த மாதிரியானது ஏற்கனவே குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றது.
மேலும் இது நாட்டில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரின் பற்றாக்குறையின் இடைவெளியைக் குறைக்க உதவ இருக்கின்றது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி, நாட்டில் 10,189 நபர்களுக்கு ஒரே ஒரு அரசு மருத்துவர் மட்டுமே இருக்கின்றார்.
மேலும் இந்தியாவில் 2 மில்லியன் செவிலியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.