2020 ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று 107வது இந்திய அறிவியல் மாநாட்டைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, முதல்முறையாக விவசாயிகள் அறிவியல் மாநாடானது நடத்தப் பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் உற்பத்தித் துறையில் தன்னிறைவு பெறுவதிலிருந்து ஊட்டச்சத்துப் பாதுகாப்பை நோக்கி சமுதாயம் நகர்வதால் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இந்த நிகழ்வின் போது ARYA போன்ற திட்டங்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப் பட்டது.
விவசாயிகள் அறிவியல் மாநாடானது பின்வரும் 3 வெவ்வேறு கருப்பொருள்களின் கீழ் நடைபெற்றது.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் தொழில்முனைவோர் மீதான விவசாயிகளின் புத்தாக்கம்.
காலநிலை மாற்றம், உயிரிப் பன்முகத்தன்மை மற்றும் பாதுகாப்பு.
விவசாயத்தின் துயரங்கள், விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கிராமப்புற உயிரித் தொழில் முனைவோர்.
ARYA
ARYA என்பது விவசாயத் துறையில் இளைஞர்களை ஈர்ப்பது மற்றும் அவர்களைத் தக்க வைப்பது என்பதாகும்.
இது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தினால் (Indian Council of Agricultural Research – ICAR) செயல்படுத்தப் பட்டு வருகின்றது.
இந்த திட்டமானது விவசாயத் துறையின் கீழ் இளைஞர்களைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இளைஞர்களின் இடம்பெயர்வு அதிகரிப்பதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது.