TNPSC Thervupettagam

விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA)

January 6 , 2020 2051 days 847 0
  • மகாராஷ்டிரா, கேரளா, உத்தரப் பிரதேசம், நாகாலாந்து, அசாம், தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் கர்நாடகா ஆகிய எட்டு மாநிலங்கள் விவசாய ஏற்றுமதியை உயர்த்துவதற்கான ஒரு செயல் திட்டத்தை முடிவு செய்துள்ளதாக விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (Agricultural and Processed Food Products Export Development Authority - APEDA) அறிவித்துள்ளது.
  • இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புத் தொகுதிகளாவன - ஜலந்தர் (உருளைக்கிழங்கு), சாங்லி (திராட்சை), சேலம் (கோழி), தேனி (வாழைப்பழம்), சித்தூர் (மாம்பழம்) ஆகியவையாகும்.
  • வேளாண் ஏற்றுமதிக் கொள்கையானது 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமானது 2022 ஆம் ஆண்டில் விவசாய ஏற்றுமதியை 30 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 60 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாக்குவது என்பதாகும்.   
  • 2016 ஆம் ஆண்டில், உலகளாவிய விவசாய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு வெறும் 2.2% மட்டுமே இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்