பொருட்காட்சி மற்றும் மாநாட்டு மையங்களுக்கு “உள்கட்டமைப்பு” எனும் தகுதி
May 22 , 2021 1522 days 563 0
பொருட்காட்சி மற்றும் மாநாட்டு மையங்களுக்கு “உள்கட்டமைப்பு”எனும் ஒரு தகுதியினை நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது.
இது மாதிரியான கட்டமைப்புகளுக்கு வங்கிக் கடன் வழங்குதலை இது எளிதாக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சமூக மற்றும் வணிகக் கட்டமைப்பு துணைத் துறையின் கீழான உள்கட்டமைப்பு துணைத் துறைகளின் இசைவானது முதன்மைப் பட்டியலில் இந்தப் பொருட்காட்சி மற்றும் மாநாட்டு மையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரிவின் கீழ் இடம் பெறுவதற்கு, இந்தக் கட்டமைப்புகளில் குறைந்தபட்சம் 1,00,000 சதுர மீட்டர் பரப்பானது பொருட்காட்சிக்காகவோ (அ) மாநாட்டிற்காகவோ பிரத்தியேகமாக ஒதுக்கப் பட்டிருக்க வேண்டும்.
இந்தப் பட்டியலில் சேர்க்கப் படுவதால் குறிப்பிட்ட துணைத் துறை கட்டமைப்பு பணிகளுக்குச் சலுகை நிதிகளைப் பெறுதல், கட்டுமான மேம்பாடு மற்றும் கட்டுமானப் பணிகளைத் தொடர்தல் போன்றவற்றில் உதவி பெற இயலும்.