ஐஎன்எஸ் ராஜ்புத் கப்பல் பணியிலிருந்து விடுவிப்பு
May 24 , 2021
1520 days
630
- இந்தியக் கடற்படையின் முதல் தாக்குதல் (அழிப்பு) கப்பலான ஐஎன்எஸ் ராஜ்புத் கப்பலானது மே 21 ஆம் தேதியன்று பணியிலிருந்து விடுவிக்கப்பட்டது.
- இந்தக் கப்பலானது 1980 ஆம் ஆண்டு மே 04 ஆம் தேதி படையில் சேர்க்கப்பட்டது.
- 41 வருட பணிக்குப் பிறகு இந்தக் கப்பலானது விசாகப்பட்டினத்திலுள்ள இந்தியக் கடற்படையின் கப்பற்கட்டும் தளத்தில் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளது.
- இந்தக் கப்பலானது ரஷ்யாவின் 61 கம்யூனார்ட்ஸ் கப்பல்கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்டது.
- இதனுடைய ரஷ்யப் பெயர் ‘நாடெஷ்னி’ (Nadezhny) என்பதாகும்.
- இந்தக் கப்பலானது மேற்கு மற்றும் கிழக்கு கடற்படைகளில் பயன்படுத்தப்பட்டது.
- இதனை வழிநடத்திய முதலாவது தலைமை அதிகாரி கேப்டன் குலாப் மோகன்லால் ஹீரா நந்தனி என்பவராவார்.
- இந்திய இராணுவப் படைப் பிரிவில் (ராஜ்புத் படைப்பிரிவு) சேர்க்கப்பட்ட முதல் இந்தியக் கடற்படை கப்பல் இதுவாகும்.
- இந்தக் கப்பலானது ஆபரேஷன் அமன், ஆபரேஷன் பவன், ஆபரேஷன் காக்டஸ் போன்ற பல நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளது.

Post Views:
630