பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் உடலியல் மற்றும் உடலியல்சார் அறிவியலுக்கான பாதுகாப்பு ஆய்வகமானது “DIPCOVAN” எனப்படுகின்ற ஆன்டிபாடிகளை கண்டறியும் ஒரு கருவியை உருவாக்கியுள்ளது.
இந்தக் கருவியானது DRDO அமைப்பின் அறிவியலாளர்கள் மற்றும் டெல்லியிலுள்ள வேன்கார்டு டயக்னோஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
DIPCOVAN என்பது ஆன்டிபாடிகளை கண்டறியும் ஒரு கருவியாகும்.
இந்தக்கருவியானது ஒரு நபர் ஏற்கனவே கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டு இருந்தால் அதற்கான ஆன்டிபாடிகள் அவர் உடலில் உள்ளதா எனக் கண்டறிவதற்கு உதவும்.
ஆன்டிபாடிகளை கண்டறிவதே இதன் செயல்பாடாகும்.
இவை செரோ-ஆய்வு போன்ற கோவிட்-19 தொற்றுநோயியல் ஆய்வுகளில் பயன்படுத்தப் படும்.
நமது உடலில் கோவிட் ஆன்டிபாடிகள் உள்ளனவா எனக் கண்டறியவும் இதனைப் பயன்படுத்தலாம்.