TNPSC Thervupettagam

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த கோவிட் நடவடிக்கைகள் – சுகாதார அமைச்சகம்

May 24 , 2021 1520 days 614 0
  • மத்திய சுகாதார அமைச்சகமானது மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் கோவிட்-19 பெருந்தொற்றினை கையாளுவதற்காக மேற்கொண்ட சிறந்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு அந்த மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.
  • இதில் ராஜஸ்தானின் நடமாடும் வெளிநோயாளிகள் நல சேவை மையம், தமிழ்நாட்டின் டாக்சி ஆம்புலன்ஸ் சேவை மற்றும் 12 இதர தனித்துவம் வாய்ந்த சில முன்னெடுப்புகளும் அடங்கும்.
  • ராஜஸ்தானில் கிராமப் பகுதிகளுக்குத் தொகுதி வாரியாக சென்று கோவிட் தொற்று சாராத அத்தியாவசியச் சேவைகளை வழங்குவதற்காக வேண்டி தொடங்கப்பட்ட நடமாடும் வெளி நோயாளிகள் நல சேவை வழங்கும் மையத்தையும் பிகானேர் பகுதியின் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வீணாவதைக் கண்காணிப்பதற்காக  ஆக்சிஜன் மித்ராஎன்ற விதிமுறை விதிக்கப்பட்டதையும்   சுகாதாரச் செயலாளர் பட்டியலிட்டுள்ளார்.
  • உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் உள்ள கிராமப் புறப்பகுதிகளில் RAT (Rapid Antigen Test) மற்றும் RT-PCR (reverse transcription - polymerase chain reaction) ஆகியவற்றினைப் பயன்படுத்தி வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்வதையும் அவர் இதில் குறிப்பிட்டுள்ளார்.
  • இதன் மூலம் 38 சதவீதமாக இருந்த கோவிட் பாதிப்பு ஒரே மாதத்தில் 2.8 சதவீதமாக குறைந்தது.
  • மருத்துவமனைகளில் முறையான ஆக்சிஜன் பயன்பாட்டினை உறுதி செய்வதற்காக கேரளாவில் ஆக்சிஜன் செவிலியர்கள் பயன்படுத்தப்பட்டது, ஹரியானாவிலுள்ள குருகிராமில் உள்ள கோவிட் தடுப்பூசி மையங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட  இயக்கம் மற்றும் பணிமனைகளிலேயே தடுப்பூசி மையங்களை அமைத்தல் போன்றவற்றினையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்