TNPSC Thervupettagam

பொலிவியாவின் லித்தியம்

April 3 , 2019 2316 days 717 0
  • பொலிவியா நாடானது இந்தியாவிற்கு தனது லித்தியம் கார்பனேட்டை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இது இந்தியாவில் லித்தியம் மின்கலன்/செல்கள் தயாரிப்பு ஆலைகளுக்கான கூட்டு முயற்சியில் ஈடுபடவிருக்கிறது.
  • உலகின் மொத்த லித்தியம் இருப்பில் நான்கில் ஒரு பங்கு பொலிவியாவில் உள்ளது.
  • இந்தக் கூட்டாண்மையானது இந்தியாவின் இலட்சிய மின்சாரப் போக்குவரத்து திட்டமான “போக்குவரத்து உருமாற்றம் மற்றும் மின்கலன் சேமிப்பு மீதான தேசியத் திட்டத்திற்கு” மிகப்பெரிய உந்து சக்தியை அளிக்கும்.
  • 2030 ஆம் ஆண்டில் குறைந்தது 30 சதவிகித வாகனங்கள் மின்சார மின்கலனால் இயக்கப்படுவதையும், அவற்றில் சமபங்கு பொலிவியாவின் லித்தியத்தைப் பயன்டுத்துவதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பொலிவியா, அர்ஜெண்டினா மற்றும் சிலி ஆகிய நாடுகள் தென் அமெரிக்க கண்டத்தின் லித்தியம் முக்கோண நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்