TNPSC Thervupettagam

போக்குவரத்து சார்ந்த நமோ நகரங்கள் திட்டம்

June 24 , 2026 8 days 158 0
  • இந்தியாவில் சமநிலையான நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தேசியத் தலைநகர் பகுதியின் (NCR) 2041 பிராந்தியத் திட்டத்தின் கீழ் நான்கு புதிய திட்டங்களை உள்ளடக்கிய "நமோ நகரங்களை" உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது.
  • 1985 ஆம் ஆண்டின் தேசிய தலைநகர் பகுதி திட்டமிடல் வாரியச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற NCR திட்டமிடல் வாரியத்தின் 42வது கூட்டத்தில் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்தியாவில் டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு நகரம் வீதம் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த நகரங்கள் நமோ பாரத் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RRTS) வழித் தடங்களில் போக்குவரத்து சார்ந்த மேம்பாடுகளாக (TOD) உருவாக்கப்படும்.
  • இத்திட்டம் மேம்பாட்டிற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹5,000 கோடி செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகையை (₹1,000 கோடி மானியம் உட்பட) உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்