TNPSC Thervupettagam

போராட்ட உரிமைகள் குறித்து உச்ச நீதிமன்றம்

July 30 , 2026 3 days 79 0
  • அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கு அரசியலமைப்பு ரீதியாக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என இந்திய உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளதுடன், போராட்டங்களின் போது காவல்துறையின் நடவடிக்கைகளுக்கான ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை உருவாக்குவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.
  • அமைதியான போராட்டங்களை காவல்துறையின் அத்துமீறல்களால் எதிர்கொள்ள முடியாது என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு கூறியதுடன், போராட்டக்காரர்கள் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் ஆகிய இரு தரப்பினரின் ஒழுக்கத்தையும் வலியுறுத்தியது.
  • 2026 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று நடைபெற்ற நாடாளுமன்றப் பேரணி மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பான பிற போராட்டங்களின் போது காவல்துறை நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படும் வழக்குகளை நீதிமன்றம் விசாரித்தது.
  • போராட்டக்காரர்கள் மற்றும் காவலர்கள் என இரு தரப்பினருக்கும் ஏற்படும் காயங்கள் கவலையளிக்கக் கூடியவை என்று கூறிய உச்ச நீதிமன்றம், சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்றும் பரிந்துரைத்தது.
  • பெரிய அளவிலான போராட்டங்களின் போது காவல்துறையின் நடத்தையை ஒழுங்கு படுத்துவதற்காக அகில இந்திய அளவிலான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) உருவாக்குவது குறித்து நீதிமன்றம் பரிசீலித்தது.
  • அரசியலமைப்பின் 19(1)(b) சரத்தின் கீழ் அமைதியாகக் கூடுவதற்கான அடிப்படை உரிமை தொடர்பான கவலைகளை மேற்கோள் காட்டி, கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்