TNPSC Thervupettagam

போர் விமானங்களில் இருந்து வேகமாக வெளியேறும் அமைப்பு

December 6 , 2025 6 days 53 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO), போர் விமானங்களில் இருந்து வேகமாக வெளியேறும்/தப்பிக்கும் அமைப்பின் அதிவேக ராக்கெட் ஸ்லெட் சோதனையை நடத்தியது.
  • சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தின் இரயில் பாதை ராக்கெட் இயக்க வசதியில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தச் சோதனையானது விமான மேற்கூரைத் துண்டிப்பு, வெளியேற்றச் செயல்முறை மற்றும் முழுமையான விமானக் குழுவினர் மீட்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தியது.
  • இந்தச் சோதனையானது ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA) மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்